செய்திகள்

புதிய தார் சாலை

திருபுவனம் பேருராட்சி தார்சாலை

திருபுவனம் பேருராட்சி தார்சாலை

திருபுவனம் பேருராட்சி மூன்றாவது வார்டில் உள்ள புது முஸ்லீம் தெரு ,நடு முஸ்லீம் தெரு ,
கீழ வடம்போக்கி சந்து ஆகிய பகுதிகளுக்கு 25 லட்சங்கள் மதீப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.

திருபுவனம் பேருராட்சி மன்ற பதவியேற்பு விழா

திருபுவனம் பேருராட்சி 3வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற ராசுதீனுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருபுவனத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

6 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.  வெற்றி

பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் முடிவு

அய்யன்சாமி தி.மு.க.  வெற்றி     2548

புருசோத்தமன் அ.தி.மு.க.            2542

நாராயணசாமி காங்கிரஸ்             1230

பக்கிரிசாமி மார்ச்சிஸ்ட்                  761

முஹம்மது சுயேட்சை                508

வெங்கடேசன் பாமக                     124

குமாரவேலு பகுஜன்சமாஜ்      120

ரவி சுயேட்சை                                120

தங்கதுரை சுயேட்சை             108

1வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

சங்கீதா தி.மு.க. வெற்றி

லதா அ.தி.மு.க.

பாரதி காங்கிரஸ்

புவனேஷ்வரி சுயேட்சை

2வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

மீரா தி.மு.க. வெற்றி

விஜயலட்சுமி காங்கிரஸ்

ரம்ஜான்பீவி அ.தி.மு.க.

பர்வீன்பானு சுயேட்சை

ஜெரீனாபேகம் சுயேட்சை

3வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

ராசுதீன் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி 140

அசரப்அலி தி.மு.க. 116

சர்புதீன் அ.தி.மு.க. 52

ஜவகர்அலி சுயேட்சை 28

முஹம்மதுமுஸ்தபா தேமுதிக 12

குலாம்ரசுல் சுயேட்சை 8

4வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

பழனி சுயேட்சை வெற்றி  234

பிராணன் சுயேட்சை 191

ராஜா சுயேட்சை 158

செல்வி அ.தி.மு.க. 46

ராஜேந்திரன் தேமுதிக 31

சிராஜுதீன் காங்கிரஸ் 18

5வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

ராஜேந்திரன் சுயேட்சை வெற்றி

சிங்செல்வராஜ் அ.தி.மு.க.

மணி தி.மு.க.

துளசிராமன் காங்கிரஸ்

கேசவன் மார்ச்சிஸ்ட்

இளங்கோவன் சுயேட்சை

நடராஜன் சுயேட்சை

மாரியப்பன் சுயேட்சை

மூர்த்தி சுயேட்சை

6வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

கணேசன் தேமுதிக வெற்றி

குமார் அ.தி.மு.க.

பொண்ணுசாமி தி.மு.க.

ராஜேந்திரன் காங்கிரஸ்

இன்பசேகரன் சுயேட்சை

7வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

வனிதா பாஜக வெற்றி

பிச்சையம்மாள் அ.தி.மு.க.

மைதிலி தி.மு.க.

மகேஸ்வரி காங்கிரஸ்

சங்கீதா தேமுதிக

8வது வார்டு உறுப்பினருக்கான வேட்பாளர்கள்

பாலசுப்பிரமணியன் தி.மு.க. வெற்றி

ராகவன் அ.தி.மு.க.

மோகன் காங்கிரஸ்

தேவன் தேமுதிக

ஆனந்தகுமார் சுயேட்சை

9 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

இராஜசேகரன் அ.தி.மு.க. வெற்றி

கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ்

உதயகுமார் தி.மு.க.

ராமகுமார் தேமுதிக

சரவணன் சுயேட்சை

10வது வார்டு உறுப்பினருக்கான வேட்பாளர்கள்

வெங்கடேசன் காங்கிரஸ் வெற்றி

குமார் அ.தி.மு.க.

ராமமூர்த்தி தி.மு.க.

கார்த்திக்பாபு சுயேட்சை

ராமச்சந்திரன் சுயேட்சை

11வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

ஜெகதீஸ்வரி தி.மு.க. வெற்றி

விஜயகுமாரி அ.தி.மு.க.

சுமதி காங்கிரஸ்

ரமிலா மார்ச்சிஸ்ட்

12வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

சாரதாம்பாள் தி.மு.க. வெற்றி

ஜெயா அ.தி.மு.க.

தமிழரசி காங்கிரஸ்

13வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

வெங்கடேசன் தி.மு.க. வெற்றி

உமாநாத் அ.தி.மு.க.

ஆனந்தன் மார்ச்சிஸ்ட்

ராஜ்குமார் பாமக

குருமூர்த்தி சுயேட்சை

14வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

ராஜன் அ.தி.மு.க. வெற்றி

சங்கர் தி.மு.க.

கனகன் காங்கிரஸ்

மணிமூர்த்தி இகம்யூனி்ஸ்ட்

வெங்கட்ராமன் சுயேட்சை

15வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

பாலகுரு தேமுதிக வெற்றி

ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.

ஜெகநாதன் தி.மு.க.

கோபி காங்கிரஸ்

கார்த்தி சுயேட்சை

சாமிநாதன் சுயேட்சை

திருபுவனம் பெண்கள் மதரசாவில் பட்டமளிப்பு விழா

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான அரபி மதரசா  அன்னை ஆயிஷா ரலி தர்பியதுன் நிஸ்வான் மதரசா  கடந்த  பத்து ஆண்டுகளாக இயங்கி வருகின்றது
இதில் மூன்று ஆண்டுகாலம் முழு நேர ஆலிமா பட்ட படிப்புகள் உயர்ந்த கல்வி திட்டத்தின் படி சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது
ஆறாமாண்டு பட்டமளிப்பு விழாவும்  பத்தாம் ஆண்டு நிறைவு விழாவும்  7-7-2011அன்று கொண்டாடப்பட்டது
விழாவிற்கு முத்தவல்லி ஹாஜி அப்துல் குத்தூஸ் தலைமை தங்கினார்.
பிலால் முஸ்தபா கிரா அத் ஓதி தொடங்கிவைக்க சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
ஆண்டறிக்கை  பொருளாளர் ஜபருல்லாஹ் வாசித்தார்.
இரண்டு ஜமாஅத் நாட்டான்மைகள் முன்னிலை வகித்தனர்.
இமாம்கள் ஜமால் மைதீன் சிராஜி,அப்துல் ஜமீல் ரியாஜி ஆகியோரின் வாழ்த்துரையும்,
வடகரை-அரங்ககுடி மதரசாவின் முதல்வர் பேராசிரியர் முஹம்மத் இஸ்மாயில் உலவி அவர்கள் பட்டங்களை வழங்கி விழா பேருரையும் ஆற்றினார்கள்.

ஆலிமாக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மதரசாவின் செயலாளர் ரஹ்மான் ஸாதிக் நன்றி நவில இனிய துவாவுடன் நிறைவு பெற்ற  இவ்விழாவில் சுமார் முன்னூறு பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளிபரிசு வழங்கும் விழா

திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பண்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா 5-7-2011அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு Dr.G.செல்வராஜ் தலைமை தாங்கினார். G.கருணாகடாட்சம் வரவேற்றார்.வர்த்தக சங்க தலைவர் உமாபதி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவன் பெற்றோர் ஆசிரியர் கழகபொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ,மாணவிகளை பாராட்டி நமதுதள பொறுப்பாளர் ஏ.ஹிபாயத்துலலா உள்பட பலர் பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து ஏற்புரை நிகழ்த்தினார்.J.பாஸ்கர்,நன்றி கூறினார்.

த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல்

திருபுவனம் த.மு.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முகமது செல்லப்பா, பொருளாளர் சல்லி நசீர், மாவட்ட நிர்வாகிகள் அப்துல் நாசர், அப்துல் ரஹ்மான், ராசுதீன்,பைஜுர்ரஹ்மான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருபுவனம் த.மு.மு.க. கிளை தலைவராக என்ஜினீயர் சபீர் ரஹ்மான், செயலாளராக எம்.சேக்பைசல், பொருளாளராக ஏ.முகமது யாசின், துணை செயலாளராக எஸ்.முகமது சாலிம் ஆகியோரும், மனித நேய மக்கள் கட்சி கிளை செயலாளராக எஸ்.ஜெகபர் அலி, துணை செயலாளர்களாக எஸ்.கதிரவன், எஸ்.சர்புதீன், மாணவரணி செயலாளராக கே.முகமது ரிஸ்வான், தொழிலாளர் அணி செயலாளராக முகமது யூசுப், வர்த்த அணி செயலாளராக பி.பைசல் முகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரத்த தான முகாம்

திருபுவனம்  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்   இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம்  சிறப்பாக நடைபெற்றது .
20.11.2010 காலை 10 மணிக்கு  SDPI  தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் முகாம் ஆரம்பமானது
துணைத்தலைவர் முஹமது ஜுபைர் முன்னிலை வகிக்க திருபுவனம் பேரூராட்சி தலைவர் S Kமணி அவர்கள் இரத்ததான முகாமை துவங்கி வைத்தார் . SM மார்டின் அவர்கள் இரத்த வகை கன்டறியும் முகாமை துவக்கி வைத்தார்கள். மாவட்ட அரசு மருத்துவமனை யும் SDPI யும் இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் ஐம்பத்தி ஒன்று நபர்கள் தலா 250 மில்லி அளவில் இரத்த தானம் செய்தனர்.

கார்,வேன் ஓட்டுனர்கள் சங்கம்  துவக்கம்

11.11.2010 காலை 10 மணிக்கு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சியின் தொழிற்சங்கமாக கார்,வேன் ஓட்டுனர்கள் சங்கம் துவங்கப்பட்டது. கிளை  தலைவர் இஸ்மாயில் மற்றும் துணைத்தலைவர் முஹம்மத் அவர்களுடன் தொழிற்சங்க தலைவர் அப்துல் மாலிக் ,துணை தலைவர் சாதிக் ஆகியோர் சங்க பலகையை திறந்து வைத்தனர்.   மாவட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் ரஹ்மான் ஸாதிக்,தஸ்லீம் அஹமது  கிளை செயலாளர் ஹாலித் பொருளாளர் அப்துல்மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எச்சரிக்கை வடக்குவீதியில் வீடு வாங்கு முன் சரிபார்க்கவும் 

iam suresh from UK myself and my mother M. Padmavathy are the only  legal heirs of the deceased mathavakkannan who expried on 04.10.2000 at 38/83 North Street Thirubuvanam after my fathers death one lady named Bhuvaneswari W/o Rajendran is occupying my father house stitivated at 38 north street Thirubhuvanam and also i come to know that lady has created some forgery documents by that that lady has changed the documents including patta tax recipts etc it is highly utracious since we are the only  legal heirs of deceased Mathavakannan who expried on 04.10.2000 so I request you to not to belive that lady and the said propertry is my father ancesteral Propertry that lady is created some forgery documents for that said house and she try to sell that propertry so I request you all not to Purchase that Propertry because legal litications are involved in that house already in 2000 itself paper publication also issued

house deatiles

village name Thirubuvanam

New Survey number 641/16 old survey number 79/4

constructed area 808.8sqft
total land 23 1/2 cent

patta Number 599

Street Name North Street

Boundries

North Side: Thalayari Street

East Side : Backyard of S Rangarajan House

West Side : backyard of R Purushotaman House

South Side : North Street

I onceagain Request you all that Not to belive that lady and not Purchase the said house. because legal litications are involved at that house. if anyone purchase the said house means then they have to face the conseqences

Thanking You

Yours Sincerely
Suresh Mathavakkannan

திருபுவனம் திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம்

திருபுவனம் திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி மற்றும் சேவை முகாம் நடந்தது. திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி, திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி, மாங்குடி பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். திருபுவனம் பள்ளி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சுவாமிநாதன், இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திகோ சில்க்ஸ் பள்ளி முதல்வர் சுந்தரம் வரவேற்றார். திகோ சில்க்ஸ் பள்ளி தாளாளர் பஞ்சநாதன் தேசியக்கொடியேற்றினார்.
ரெட்கிராஸ் பயிற்சியாளர் மகாதேவன், ஹென்றி டெனால்டு படத்தை திறந்து வைத்தார். திருவிடைமருதூர் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் பாஸ்கர் கொள்கைகள், பாடல்கள், உறுதிமொழி பயிற்சியளித்தார். மாவட்ட பயிற்றுனர் மகாதேவன் அடிப்படை கொள்கைகள் பற்றிய பயிற்சி அளித்தார். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலாளர் ராமலிங்கம், “இயற் கை மருத்துவமும், நலவாழ்வும்,’ என்ற தலைப்பில் பேசினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், “உடல் நலமே உயிர் நலம்,’ என்பது பற்றி பேசினார். திருவிடைமருதூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துணை அலுவலர் மரியசூசை தலைமையில் பத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வண்டியுடன் வந்து தீத்தடுப்பு செயல்முறை விளக்கப்பயிற்சியும் இயற்கை பேரிடம் மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தனர். கும்பகோணம் சக்தி பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாகி ராஜமகேந்திரன் ரத்ததானம், உட ல் தானம், கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இலவச ரத்தவகை கண்டறியும் பரிசோதனைகள் நடத்தி அடையாள அட்டைகள் வழங்கினர்.
நிறைவு விழாவுக்கு பள்ளி பொது மேலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஸ்டார் பள்ளி நிர்வாகி மார்ட்டின், மாநில பயிற்றுனர் ஆடுதுறை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி ருபுவனம் டவுன் பஞ்சாயத்து த லைவர் மணி, துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். ஜே. ஆர்.சி., மாவட்ட கன்வீனர் ஜான் ஸ்டீபன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். குடந்தை ஈஷா யோகா மைய நிர்வாகி ராஜன் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஜூனியர்களுக்கு கட்டுரை, வினாடி வினா, ஓவியப்போட்டிகள் நடந்தது. ஜே.ஆர்.சி., கவுன்சிலர்கள் சிவக்குமார், மோகன் போட்டி நடுவர்களாக இருந்தனர். திருவிடைமருதூர் ஒன்றியக் கன்வீனர் கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., கவுன்சிலர்கள் பாஸ்கர், அனுராதா, உமாசங்கர் ஆகியோர் செய்திருந்தனர். திகோ சில்க்ஸ் பள்ளி ஜே.ஆர்.சி., கவுன்சிலர் வனிதா நன்றி கூறினார்.

ஆற்றில் மூழ்கி இறந்த பள்ளி மாணவன் உடல் மீட்பு

நேற்று முன்தினம் காலை அம்மாசத்திரம்&வேப்பத்தூர் இணைப்பு ரோட்டில் செல்லும் வீரசோழன் ஆற்றில் குளிக்க சென்றவன் வீடு திரும்பவில்லை. இதைதொடர்ந்து திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மரியசூசை தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களின் உதவியுடன் நேற்று முன்தினம் காலை முதல் ஆற்றில் சிறுவனை உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் விஸ்வந்தின் உடல் சாத்தனூர் தடுப்பணையில் மீட்கப்பட்டது. பின்னர் திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவமும் குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

 
 
 

 

 

 

 

 
 
திருபுவனம் பெரிய பள்ளிவாசல்  திருமண மண்டபத்தில்
18-9-2010 அன்று அமைச்சர் கோசி மணியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு   அமீரக தமிழர் அமைப்பும்
குடந்தை அன்பு மருத்துவமனையும் இணைந்து நடத்திய   இலவச சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக  நடைப்பெற்றது.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர் செ.ராமலிங்கம், நகர தி.மு.க. செயலாளர் ஆச்சி என்கிற  எஸ்.கே.பஞ்சநாதன், செக்கர் கரீம், அன்சரலி, பஜலூர் ரகுமான், சாந்தி ஸ்வீட்ஸ் முனுசாமி, பாரூக், அஷ்ரப் அலி, சிராஜுதீன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருபுவனம் மாணவிகளுக்கு அமைச்சர் கோ.சி.மணி லேப்-டாப்  வழங்கினார்.

 கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் லேப்-டாப் வழங்கப்பட்டது.

கும்பகோணம் நகராட்சி ஏ.ஆர்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் நேற்று 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பின் நடந்த நிகழ்ச்சியில் கடந்த 2009 – 10ம் கல்வியாண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ்வழியில் தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சௌந்தர்யா, சிந்து, ஆகியோருக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் மதிப்புடைய லேப்டாப்பை அமைச்சர் கோ.சி.மணி வழங்கினார்.

திருபுவனம் நகர தி மு க அலுவலகம் திறப்புவிழா

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கோ.சி.மணியின் 80&வது பிறந்தநாள்விழாவையொட்டி

திருபுவனம் நகர தி மு க அலுவலகம் கீழ சாலையில் புதிதாக கட்டப்பட்டு கோ சி மணி அறிவாலயம் என்ற பெயரில்  நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளரும் மத்திய மந்திரியுமான பழனிமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் செ.ராமலிங்கம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் அறந்தாங்கிராஜன், முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, குத்தாலம் பி.கல்யாணம், சாக்கோட்டை க.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி செல்விசிவஞானம், திருவிடைமருதூர் ஒன்றிய துணைத்தலைவர் கோசி.இளங்கோவன், சுந்தரஜெயபால், நகர தி.மு.க. செயலாளர் ஆச்சி என்கிற  எஸ்.கே.பஞ்சநாதன், பேரூராட்சி தலைவர் எஸ்.கே.மணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

மலேசிய அமைச்சர் திருபுவனத்தில் வழிபாடு

மலேசிய மனித உரிமைகள் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்  திருபுவனத்தில் உள்ள சரபர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து சூரியனார் கோயில், அய்யாவாடி, ஆலங்குடி குரு பகவான் கோயில், தரசுரம் கோயில் ஆகியவற்றிற்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

3-9-2010 தினமலர்

 
திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலில்
ரதத்தில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளிப்பட்டைகள் திருட்டு
மர்ம மனிதர்கள் கைவரிசை
 

திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலின் ரதத்தில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளிப்பட்டைகளை, அறையின் பூட்டை அறுத்து திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில் என்று சிறப்பு பெற்ற கம்பகரேஸ்வரர் கோவில் உள் ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திரம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையில் சரபேஸ்வரர் வலம் வரும் வெள்ளி ரதம் ஒன்று உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரதத்தின் மீது வெள்ளிப்பட்டைகள் பதிக்கப் பட்டிருந்தன.
இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து வழி பட்டு செல்கிறார்கள். மேலும் ஞாயிற்றுக்கிழமை களில் ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகிறார் கள். தற்போது கோவிலில் மராமத்து பணிகள் நடை பெற்று வருவதால் சுற்றுப் புறசுவர்களில் ஒன்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரதத்தின் வலது, இடது புறமாக 3 இடங்களில் பதிக்கப் பட்டிருந்த சுமார் 2 கிலோ எடை கொண்ட 7 வெள்ளிப் பட்டைகளை யாரோ சில மர்ம மனிதர்கள் ரதம் இருக்கும் அறையின் பூட்டை அறுத்து திருடிச்சென்றுள்ள னர். சுற்றுப்புற சுவர்களில் உள்ள வழியை பயன்படுத்தி கொள் ளையர்கள் உள்ளே நுழைந் திருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.
திருட்டு போன வெள்ளிப் பட்டைகளின் மதிப்பு ரூ.45 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த துணிகர திருட்டு பற்றி கோவில் கண்காணிப்பாளர் மலையாண்டிசாமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தணிகாசலம், சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் தேரில் பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்து பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கூட்டம்
13-8-2010 வெள்ளிக்கிழமை ஜும் ஆவிற்கு பின் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கூட்டத்தில்
மதரசாவின் புதிய பொறுப்பாளர்களாக சிராஜுதீன் தலைவர் ,ரஹ்மான் சாதிக் செயலாளர் ,ஜபருல்லா  பொருளாளர் என மதரசாவின் நிர்வாக குழு தீர்மானம் இயற்றியதை ஜமாஅத் அங்கீகரித்தது.
புதிய பள்ளிவாசல் மேல் மாடியில் மழை நீர் கசிவு ஏற்படுவதை தடுக்க பராமரிப்பு பணிகள் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான நிதி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
கூடி இருந்த நன் மக்கள் தங்களால் இயன்ற பண உதவியை தர மனமுவந்து எழுதி சென்றார்கள்.
ஊரின் பணியாளர் இமாம் அலி  அவர்களுக்கு ருபாய் ஐம்பது நோன்பு கால ஊதியமாக ஒவ்வொரு வீட்டினரும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதுவரை ரூபாய் ஐம்பதாக இருந்த ஊர் வரி இனி நூறு ரூபாய் என்று மாற்றம் செய்யபட்டது.
ரமலான் சிறப்பு அன்பளிப்பு வழக்கம் போல் வசூல் செய்து ஊரின் பணியாளர்களான இமாம்,பிலால்,பக்கீர்ஷா ஆகியோருக்கு வழங்கவும் முடிவு செய்ய பட்டது.

திருபுவனம் பெண்கள் மதரசாவில் பட்டமளிப்பு விழா

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான அரபி மதரசா  அன்னை ஆயிஷா ரலி தர்பியதுன் நிஸ்வான் மதரசா  கடந்த ஒன்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றது
இதில் மூன்று ஆண்டுகாலம் முழு நேர ஆலிமா பட்ட படிப்புகள் உயர்ந்த கல்வி திட்டத்தின் படி சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது
ஐந்தாவது ஆலிமா பட்டமளிப்பு விழாவும் தையற்க்கலை சான்றிதழ் வழங்கும் விழாவும் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவும்  முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு முத்தவல்லி ஹாஜி அப்துல் குத்தூஸ் தலைமை தங்கினார்.
பிலால் முஸ்தபா கிரா அத் ஓதி தொடங்கிவைக்க சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
ஆண்டறிக்கை செயலாளர் ஜபருல்லாஹ் வாசித்தார்.
இரண்டு ஜமாஅத் நாட்டான்மைகள் முன்னிலை வகித்தனர்.
இமாம்கள் ஜமால் மைதீன் சிராஜி,அப்துல் ஜமீல் ரியாஜி ஆகியோரின் வாழ்த்துரையும்,
நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா வின் பேராசிரியர் முஹம்மத் இஸ்மாயில் பாஜில் பாகவி அவர்கள் பட்டங்களை வழங்கி விழா பேருரையும் ஆற்றினார்கள்.
ஆறு மாணவிகள் தையற்க்கலை சான்றிதழ்களும்,
நான்கு மாணவிகள் ஆலிமா பட்டமும் பெற்றனர்.
ஆலிமாக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மதரசாவின் பொருளாளர் ரஹ்மான் ஸாதிக் நன்றி நவில இனிய துவாவுடன் நிறைவு பெற்ற  இவ்விழாவில் சுமார் அறுநூறு பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

   

 • பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் நடத்திய பொது வேலை நிறுத்தம் திருபுவனதிலும் முழு வெற்றி பெற்றது.
  அனைத்து கடைகளும் அடைக்க பட்டு இருந்தது.
  சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா ,மனித நேய மக்கள் கட்சி ஆகிய சமுதாய கட்சிகள் இந்த
  பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் நகரில் அனைத்து
  வாடகை கார்கள்,வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்க பட வில்லை.
  ஆளும் கட்சியினர் கூட கடைகளை அடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.-ஸாதிக் பின் இஸ்மாயில்

  1.திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளி சாதனைகும்பகோணம்: திருபுவனம் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். கும்பகோணம் அருகே திருபுவனத்தில் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ப்ளஸ் 2 தேர்வில் ரீகானா என்ற மாணவி 1065 மார்க் பெற்று முதலிடமும், பெனாசிர்பேகம் 840 மார்க் பெற்று இரண்டாமிடமும், சுபா 779 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். 85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கீர்த்திகா 434 மார்க் பெற்று முதலிடமும், ரிஸ்வானா பர்வீன் 430 மார்க் பெற்று இரண்டாமிடமும், திவ்யபாரதி 395 மார்க் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் பஞ்சநாதன், தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

   

 • 2.திருபுவனம் அரசு பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனைகும்பகோணம்: திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் 118 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 117 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 34 பேர் 400க்கு மேல் மார்க் பெற்றுள்ளனர். பள்ளி முதல் மாணவி சௌந்தர்யா 485 மார்க், இரண்டாம் மாணவி சிந்து 481 மார்க்கும், மூன்றாம் மாணவி தேவிகா 478 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவன் ஆகியோர் பாராட்டினர். நன்றி தினமலர்    
 • திருபுவனம்-பேரூராட்சி

27-11-2006 தினமலர்

போலி நகைகளுக்கு பணம் குஜராத் கும்பல் கைவரிசைகும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கும்பகோணத்தில் ஷாப்பிங் கடை நடத்தி வருகிறார். இவரிடம் குஜராத்தை சேர்ந்த தணிபாய் மற்றும் அவரது மகன்கள் ராஜீவ், சங்கர் ஆகிய மூவரும் சேர்ந்து வியாபாரம் செய்ய பணம் கேட்டனர்.பணத்துக்கு பதிலாக தங்களிடம் உள்ள ஒரு கிலோ தங்க நகைகளை வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த ஒரு குண்டுமணி நகையை சோதித்து பார்த்தபோது அது சுத்தமான தங்கம் என தெரிந்ததால் ரூ.
ஒன்றரை லட்சம் கடந்த அக்.,10ம் தேதி தணிபாயிடம் பீர்முகம்மது வழங்கினார்.கும்பகோணம் இந்திரா நகர் ராஜேந்திரன் என்பவரிடம் தணிபாய் தங்க நகைகளை கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அவர் தங்க நகையை பரிசோதித்தபோது அவை போலி என தெரியவந்ததால், நேற்று முன்தினம் கும்பகோணம் மேற்கு போலீஸில் புகார் செய்தார்.பீர்முகம்மது தணிபாய் மற்றும் அவரது மகன்களை தேடினார். அவர்கள் மோசடி செய்துள்ளதாக தகவல் வந்ததும், தன்னிடம் உள்ள நகைகளை சோதித்து பார்த்தார். அவை அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.””தணிபாய் மற்றும் அவர்களது மகன்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் கும்பகோணம் பகுதியில் பல இடங்களில் இதேபோல மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கு பிரச்னை வரும் என்று கூறி பலர் புகார் கொடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்,” என போலீஸார் தெரிவித்தனர்.
2-10-06 தினமலர்
அ.தி.மு.க., வேட்பாளரை சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலைமறியல்
கும்பகோணம்: அ.தி.மு.க.,வேட்பாளர் என அங்கீகார கடிதம் கொடுத்தும் சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டு தி.மு.க., வேட்பாளராக மைதிலி பஞ்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வனிதா ராஜேந்திரன் பாரதீய ஜனதா வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து பாரதீய ஜனதாவில் அங்கீகாரம் கடிதம் பெறமுடியவில்லை. அ.தி.மு.க., வேட்பாளராக அங்கீகாரம் பெற்றுள்ளேன். இதனை ஏற்று அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வனிதா தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்து கடிதத்தை கொடுத்தார். மேலதிகாரியிடம் கேட்டு இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி செல்வம் தெரிவித்தார். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட அன்று வனிதா ராஜேந்திரன் சுயேட்சை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் டவுன் பஞ்õசாயத்து முன்பு நிர்வாக அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த திருவிடைமருதுõர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அ.தி.மு.க.,வினரிடம் சமரசம் பேசியபின் கலைந்து சென்றனர்.மேலும் அங்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் அ.தி.மு.க., சின்னம் வழங்கும் படி வற்புத்தினர். நிர்வாக அதிகாரி செல்வம் அவ்வாறு வழங்க முடியாது என திட்ட வட்டமாக அறிவித்து சட்டகுறிப்பு ஆதாரங்களை காட்டி விளக்கினார்.
அ.தி.மு.க., சார்பில் யாரும் போட்டியிட முடியவில்லையே என ஆதங்கத்தில் கோபமடைந்த அ.தி.மு.க., வினர் சிலர் நிர்வாக அதிகாரியை போலீஸார் முன்னிலையிலே தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவோம் என பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தனர்.

1வது வார்டு

Advertisements

12 பதில்கள்

 1. தகவல்களை சேகரித்து பதிவிட்டால் புதிய தகவல்களாக இருக்கும். முயற்சி செய்யவும்

  • இதற்கு முன் தந்த பதிலை பார்க்கவும். தளம் மேலும் சிறப்போங்க தங்களை போன்றோர் எம்மோடு பொருளாதாரரீதியில் இணைந்து செயல்பட்டால் நம்மூருக்கு நலம். யோசிக்கவும்.

 2. திருபுவனம் சம்பந்தப்பட்ட செய்திகள் நாளிதழ், மின்னஞ்சல், இணையதளம் என அனைத்து முறைகளிலும் பெறப்படுகிறது. நம்பகமான செய்திகள் மட்டுமே பிரசுரிக்கப்படுகிறது. நம்பகமற்ற செய்தி என ஐயம் ஏற்பட்டால் உள்ளூர் சகோதரர்களிடம் விசாரித்து அதன்படி செயல்பட்டுள்ளோம். thirubuvanam.blogspot.com
  என்ற பெயரில் நான்காண்டு முன்பே துவங்கி தற்போது சொந்த டொமைனில் செயல்படும் இந்ததளம் நிச்சயமாக எக்காலத்திலும் கூட்டு முயற்சியாகவே செயல்படும். இயன்றால் நீங்களே செய்தியாளராக செயல்படலாம் அதற்கு முன் நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்தினால் நீங்கள் அனுப்பும் செய்திகள் பிரசுரிக்கப்படும். உதவி செய்யுங்கள் உபத்திரம்செய்யாதீர்கள்.

 3. I really appreciate who has been effort to launch our thirubuvam web site and it is very useful to know the news immediately who ever in abroad. I really thank you once again the team. Keep on posting.

 4. செய்திகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

 5. any update inform my mail id.

 6. I am from thirubuvanam, everything is superb.
  Just now i see this site. wonderful. Keep it up.
  I am from nattukottai Lane, tirubuvanam

 7. exesellent /very good idea,god is great

 8. We need latest updates. kannan, chennai

 9. hai i am faisal from tbm. very good job ya,

 10. hi niranjan from tbm. i am very proud to be living in tbm. keep it up

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: