கோப்பு வகை: Blogroll
27-11-2006 தினமலர்
போலி நகைகளுக்கு பணம் குஜராத் கும்பல் கைவரிசைகும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கும்பகோணத்தில் ஷாப்பிங் கடை நடத்தி வருகிறார். இவரிடம் குஜராத்தை சேர்ந்த தணிபாய் மற்றும் அவரது மகன்கள் ராஜீவ், சங்கர் ஆகிய மூவரும் சேர்ந்து வியாபாரம் செய்ய பணம் கேட்டனர்.பணத்துக்கு பதிலாக தங்களிடம் உள்ள ஒரு கிலோ தங்க நகைகளை வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த ஒரு குண்டுமணி நகையை சோதித்து பார்த்தபோது அது சுத்தமான தங்கம் என தெரிந்ததால் ரூ.
ஒன்றரை லட்சம் கடந்த அக்.,10ம் தேதி தணிபாயிடம் பீர்முகம்மது வழங்கினார்.கும்பகோணம் இந்திரா நகர் ராஜேந்திரன் என்பவரிடம் தணிபாய் தங்க நகைகளை கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அவர் தங்க நகையை பரிசோதித்தபோது அவை போலி என தெரியவந்ததால், நேற்று முன்தினம் கும்பகோணம் மேற்கு போலீஸில் புகார் செய்தார்.பீர்முகம்மது தணிபாய் மற்றும் அவரது மகன்களை தேடினார். அவர்கள் மோசடி செய்துள்ளதாக தகவல் வந்ததும், தன்னிடம் உள்ள நகைகளை சோதித்து பார்த்தார். அவை அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.””தணிபாய் மற்றும் அவர்களது மகன்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் கும்பகோணம் பகுதியில் பல இடங்களில் இதேபோல மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கு பிரச்னை வரும் என்று கூறி பலர் புகார் கொடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்,” என போலீஸார் தெரிவித்தனர்.
2-10-06 தினமலர்
அ.தி.மு.க., வேட்பாளரை சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலைமறியல்
கும்பகோணம்: அ.தி.மு.க.,வேட்பாளர் என அங்கீகார கடிதம் கொடுத்தும் சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டு தி.மு.க., வேட்பாளராக மைதிலி பஞ்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வனிதா ராஜேந்திரன் பாரதீய ஜனதா வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து பாரதீய ஜனதாவில் அங்கீகாரம் கடிதம் பெறமுடியவில்லை. அ.தி.மு.க., வேட்பாளராக அங்கீகாரம் பெற்றுள்ளேன். இதனை ஏற்று அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வனிதா தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்து கடிதத்தை கொடுத்தார். மேலதிகாரியிடம் கேட்டு இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி செல்வம் தெரிவித்தார். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட அன்று வனிதா ராஜேந்திரன் சுயேட்சை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் டவுன் பஞ்õசாயத்து முன்பு நிர்வாக அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த திருவிடைமருதுõர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அ.தி.மு.க.,வினரிடம் சமரசம் பேசியபின் கலைந்து சென்றனர்.
மேலும் அங்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் அ.தி.மு.க., சின்னம் வழங்கும் படி வற்புத்தினர். நிர்வாக அதிகாரி செல்வம் அவ்வாறு வழங்க முடியாது என திட்ட வட்டமாக அறிவித்து சட்டகுறிப்பு ஆதாரங்களை காட்டி விளக்கினார்.
அ.தி.மு.க., சார்பில் யாரும் போட்டியிட முடியவில்லையே என ஆதங்கத்தில் கோபமடைந்த அ.தி.மு.க., வினர் சிலர் நிர்வாக அதிகாரியை போலீஸார் முன்னிலையிலே தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவோம் என பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தனர்.
1 மறுமொழி இது வரை
மறுமொழியவும்
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
பிரசுரிக்க அல்ல…
ஹாய், வணக்கம்…
கொஞ்சம் படிங்க..
http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_10.html–>
Comment by செந்தழல் ரவி அக்டோபர் 10, 2006 @ 2:21 மு.பகல்